??????? 29, 2022

எம்மைப் பற்றி


சுகாதார அறிவு (Health Literacy)


“அடிப்படைச் சுகாதாரத் தகவல்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளும் திறன் மற்றும் அதனை விளங்கி அதனடிப்படையில் தனது ஆரோக்கியத்துக்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்கக்கூடிய திறன்.”

சுகாதார அறிவு உடல் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவரின் சுகாதார அறிவு அதிகமாக இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியம் சிறந்ததாக அமையும்.

அண்மைக் காலங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து மருத்துவம் தொடர்பான ஏராளமான தகவல்கள் இணையத்தில் பரிமாறப்பட்டு வருகின்றன. இவ்வாறான தகவல்கள் உண்மை போல் தோற்றமளித்தாலும் அவற்றில் அதிகமானவை எதுவித ஆதாரமும் அற்றவை. இதனடிப்படையில் சுகாதாரம் தொடர்பான நம்பகமான தகவல்களை வழங்கக்கூடிய மூலாதாரங்களின் தேவைப்பாடு அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதேபோன்று இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு ஏற்றாற்போல் இத்தகவல்கள் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

பார்வை

சுகாதாரம் தொடர்பான நம்பகமான தகவல்களை விஞ்ஞான ரீதியான ஆதாரங்களுடன் வழங்கக்கூடிய ஒரு மையத் தலமாக செயட்படல்.

பணி

தனது ஆரோக்கியம் தொடர்பான சரியான முடிவுகளை எடுப்பதற்கு, சுகாதாரம் தொடர்பான அடிப்படை அறிவை பெற்றிருப்பது அத்தியாவசியமாகும். ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு தனி மனிதனினது ஆரோக்கியமும் முக்கியமானதாகும். முழுமையான சுகாதாரத்தை பேணுவதற்கு உடல், உள, சமூக, ஆன்மீக நலம் என்பவை முக்கியமானவையாகும்.

சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களிடமுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் சந்தேகங்களை இந்த இணையத்தளத்திலுள்ள உங்கள் கேள்வியை அனுப்பும் of this website.