004
கேள்வி
எனது குழந்தைக்கு நான்கு வயது மாத்திரமே. அவன் திடீரென சுகயீனமுற்றதனால் வைத்தியசாலையில் அனுமதித்தோம். அவனுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சொன்னார்கள். அவனுக்கு ஊசி மூலம் இன்சுலின் வழங்கப்பட்டது. அதனை ஆயுற்காலம் முழுவதும் எடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். எமக்கு இந்தக் குழந்தையைப் பற்றி கவலையாக உள்ளது. இன்சுலினை நிறுத்திவிட்டு உணவுக் கட்டுப்பாட்டு முறையினால் மாத்திரம் அவனது நோயைக் குணப்படுத்த முடியாதா?
பதில்
நீரிழிவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. அதிகமான நீரிழிவு நோயாளிகள் வகை 1 (type 1 diabetes), வகை 2 (type 2 diabetes) அல்லது கர்ப்பம் தொடர்பான நீரிழிவு என்ற எதாவது ஒரு வகைக்குள் உள்ளடங்குவர்.
உங்களது குழந்தை அநேகமாக நீரிழிவு வகை 1 என்ற நோயினாலேயே பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். உடலின் நீர்ப்பீடன தொகுதியில் (immune system) அல்லது நோய் எதிர்ப்புச் சக்தியில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் காரணமாகவே இந்நோய் ஏற்படுகின்றது. சதையியில் (pancreas) உள்ள பீட்டா கலங்கள் (beta cells) இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. இந்த பீட்டா கலங்கள் நோயெதிர்ப்புக் கலங்களினால் தவறுதலாக தாக்கப்படுகின்றது. இவ்வாறாக பீட்டா கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டால் உடலில் இயற்கையாக இன்சுலின் உற்பத்தி நடைபெறாது
இரத்தத்திலுள்ள குளுக்கோஸை கட்டுப்படுத்துவதட்கு இன்சுலின் எனப்படும் ஹோர்மோன் அத்தியாவசியமாகும். உடலில் இன்சுலின் உற்பத்தி நடைபெறாவிட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். இதனால் பல்பேறுபட்ட குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன் கீட்டோஅசிடோசிஸ் (ketoacidosis) எனப்படும் ஒரு பாரதூரமான பக்கவிளைவு சிலருக்கு எற்படலாம். அநேகமாக உங்கள் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது கீட்டோஅசிடோசிஸ் ஏற்பட்டிருந்திருக்கலாம். இது உயிராபத்தைத் தோற்றுவிக்கலாம். இதற்கு உடனடி சிகிச்சை வழங்கப்படாவிட்டால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு மரணமும் சம்பவிக்கலாம்.
Since type 1 diabetes is caused due to the absence of insulin, the only treatment is to replace insulin which is missing in your child?s body. There are newer oral tablets being tested for type 1 diabetes. But they too need to be taken along with the insulin.
இந்நோய்க்காக சில உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் அவசியம்தான், எனினும் இதனால் மாத்திரம் இரத்தத்திலுள்ள குளுக்கோஸை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே உங்கள் குழந்தை ஆயுட்காலம் முழுவதும் இன்சுலினை உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் உயிராபத்தான பக்க விளைவுகளைத் தவிர்க்க முடிவதோடு, உடலாரோக்கியத்தையும் சீராகப் பேண முடியும்.
Last updated: August 29, 2020
References
- Powers, Alvin C., Kevin D. Niswender, and Carmella Evans-Molina. 2018. “Diabetes Mellitus: Diagnosis, Classification, and Pathophysiology.” In Harrison’s Principles of Internal Medicine, by Jameson L, Fauci A, Kasper D, Hauser S, Longo D and Loscalzo J, 2850-2859. McGraw-Hill Education.
- Powers, Alvin C., Kevin D. Niswender, and Michael R. Rickels. 2018. “Diabetes Mellitus: Management and Therapies.” In Harrison’s Principles of Internal Medicine, by Jameson L, Fauci A, Kasper D, Hauser S, Longo D and Loscalzo J, 2859-2875. McGraw-Hill Education.