003
கேள்வி
எனது மனைவி மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறாள். எமது முதல் இரண்டு குழந்தைகளும் சீசர் சத்திரசிகிச்சை மூலம் கிடைத்தன. அவள் மூன்றாவது குழந்தையை சாதாரணமான முறையில் பெற விரும்புகிறாள். இதற்க்காக உதவி செய்யக்கூடிய வைத்தியர் யாரும் அரச அல்லது தனியார் துறையில் இருக்கின்றாரா?
பதில்
சீசர் எனப்படுவது சத்திரசிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியேற்றுவதாகும். சாதாரண முறையில் குழந்தை பிறந்தால் தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே சீசர் மேற்கொள்ளப்படும். குழந்தை எவ்வாறு பிரசவிக்கப்படும் என்று தீர்மானிக்கும் பொழுது மகப்பேற்று வைத்திய நிபுணர் பல்வேறு காரணங்களை கருத்தில் கொள்வர்.
ஒரு தாய் சீசர் மூலம் குழந்தை பெற்றால் அடுத்தடுத்து வரும் குழந்தைகள் பிறக்கும் போது கருப்பையிலுள்ள காயத்தின் தழும்பு விலக வாய்ப்புண்டு. ஏனெனில் சாத்திரசிகிச்சையின் பின்னர் உருவாகும் தழும்பு சாதாரண கருப்பை தசையை விட பலம் குன்றியது.
ஒரு தாய் ஒருமுறை மாத்திரமே சீசர் செய்திருந்தால் அடுத்த குழந்தை பிறக்கும் போது கருப்பைத் தழும்பு விலகுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இவ்வாறான நிலைமைகளில் வேறு காரணங்கள் எதுவும் இல்லாவிட்டால் சாதாரணமாக குழந்தை பெறுவதற்கு முயற்சிக்கப்படும். எனினும் இவ்வாறான ஒவ்வொரு தாயும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டு மிகவும் கவனமாகவே இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தாய் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அனுபவமுள்ள மகப்பேற்று நிபுணரின் கண்காணிப்பின் கீழ் குழந்தையை பிரசவிக்க வேண்டும்.
If a mother had undergone more than one CS, then the risk of womb scar loosening increases during next delivery. This can lead to a serious complication called ?womb rupture?. In this situation the mother?s and the baby?s life can be in danger.
மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இரண்டு சீசர்கள் செய்த தாய் அடுத்த குழந்தையை சாதாரணமாக பிரசவிப்பது பொதுவான நிலைமைகளில் சாத்தியமில்லை.
Last update: August 28, 2020
References
- Royal College of Obstetricians and Gynaecologists. 2015. “Birth After Previous Caesarean Birth.” Royal College of Obstetricians and Gynaecologists. October. Accessed August 28, 2020. https://www.rcog.org.uk/globalassets/documents/guidelines/gtg_45.pdf.